கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி
கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் கையில் பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டு விக்கிரமங்கலம், அம்பாப்பூர், கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இந்தநிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.