எஸ்.வாழவந்தியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2023-01-31 18:45 GMT

மோகனூர்:

நாமக்கல் மாவட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லதம்பி தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தொழுநோய் குறித்து கோஷங்களை எழுப்பியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொழுநோய் அறிகுறிகள் குறித்து பாலப்பட்டி சுகாதார ஆய்வாளர் கோபி விளக்கி பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்