முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு

முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர்.

Update: 2022-08-10 17:23 GMT


ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முளைப்பாரி திருவிழா அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் புளிக்காரத்தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை 9 நாட்கள் விரதம் இருந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்கள் ராமநாதபுரம் சின்னகடை பகுதிக்கு வந்தபோது பாசிப் பட்டறை ஜமாத் மற்றும் சின்னகடை முஸ்லிம்கள் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்வாறு முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் சார்பிலும் ஜமாத் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்