மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து துறவியர் பேரவையினர் ஊர்வலம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல்லில் துறவியர் பேரவையினர் ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-08-26 21:00 GMT

திண்டுக்கல் துறவியர் பேரவை சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊர்வலம் மற்றும் கண்டன கூட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அதிபர் மரிவளன் வரவேற்றார். பின்னர் மறைமாவட்ட முதன்மைகுரு சகாயராஜ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் பழைய கோர்ட்டு அருகில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மணிக்கூண்டை வந்து அடைந்தது.

பின்னர் அங்கு கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், சி.எஸ்.ஐ. பாதிரியார் பெனின் மனோராஜா, டி.இ.எல்.சி. பாதிரியார் செபாஸ்டின், சேசு சபை வக்கீல் சகாய பிலோமின்ராஜ், மறைமாவட்ட பொருளாளர் சாம்சன் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்டத்தை சேர்ந்த பாதிரியார்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திண்டுக்கல் மறைவட்ட அதிபர் மரிய இன்னாசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்