காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை இன்று தொடக்கம்

காங்கிரஸ் சார்பில் 31-வது ஆண்டிற்கான ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை இன்று தொடங்கப்பட்டது.

Update: 2022-08-09 11:26 GMT

சென்னை,

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து ஆண்டுதோறும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 31-வது ஆண்டிற்கான ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை இன்று தொடங்கப்பட்டது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு ஜோதியை ஏற்றி யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த மதநல்லிணக்க ஜோதி யாத்திரை பல்வேறு மாநிலங்களுக்கு சாலை மார்க்கமாக பயணித்து 19-ந்தேதி டெல்லியை அடைய உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்