ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

வேடசந்தூரில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நடந்தது.

Update: 2023-08-20 19:45 GMT

வேடசந்தூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதற்கு வட்டார தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, வட்டார பொதுச்செயலாளர் பகவான், வட்டார துணை தலைவர் ஜாபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் கலந்து கொண்டார். விழாவில் ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேடசந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பஷீர்அகமது நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்