ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா
கோவில்பட்டியில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோவில் முன்பு கல்வி உபகரணங்கள், மாலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சந்திரசேகரன், பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட இணைச் செயலாளர் தவமணி, நகரச் செயலாளர் மகேஷ் பாலா ஆகியோர் கலந்துகொண்டு கல்வி உபகரணங்கள் சிற்றுண்டி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், விஜய் ஆனந்த், லட்சுமண ராஜா, விஜய் சாம்சன், ஜெயக்கொடி, பொன் முருகன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.