புகையிலை பொருட்கள் விற்ற ராஜஸ்தான் வாலிபர் கைது

வாலாஜாவில் புகையிலை பொருட்கள் விற்ற ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-07 19:30 GMT

வாலாஜா

வாலாஜாபேட்டை ராமசாமி தெருவில் வாலாஜா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த மளிகை கடை ஒன்றில் வேலை செய்யும் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திர குமார் (வயது 23) என்பதும், கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கடையில் சோதனை செய்து, சுமார் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மகேந்திரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்