விளாத்திகுளத்தில் ராஜராஜ சோழன் சதய விழா
விளாத்திகுளத்தில் ராஜராஜ சோழன் சதய விழா நடைபெற்றது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பாரதியார் பஸ்நிலையம் முன்பு மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு சதய விழா வாதிரியார் சமுதாய நலச் சங்கத்தின் சார்பாக நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய உருவப்படத்திற்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ராஜராஜ சோழனின் உருவப்படத்திற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை மாநில வர்த்தக அணி செயலாளர் தேவதாசன், மாநில இளைஞரணி செயலாளர் பாலமுருகன், மூவேந்தர், முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் வாதிரியார் நலச்சங்க கமிட்டியினர் செய்து இருந்தனர்.