மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ்

அசோக்நகர் பள்ளி அருகே நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-04 10:18 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் ஒரே ஒரு குறுகிய சாலையில் வந்து திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதை தடுக்க காவலர்கள் கூட நிறுத்தப்படவில்லை.

பள்ளிக்கு முன்பாக வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும். இதை தடுக்க கூடுதல் பணியாளர்கள், எந்திரங்களை அமர்த்தி ஓரிரு நாட்களில் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிகள் முடியும் வரை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விடுமுறை வழங்கும்படி நிர்வாகத்தை அறிவுறுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்