மரக்காணம் வட்டாரத்தில் மழை 3,500 ஏக்கர் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு

மரக்காணம் வட்டாரத்தில் பெய்த மழையால் 3,500 ஏக்கர் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-20 16:39 GMT

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கந்தாடு, முருக்கேரி, கூனிமேடு, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, இந்த நிலையில் மரக்காணம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் நடந்து வந்த உப்பு உற்பத்தி பணிகள் 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்பு பெய்த கன மழை காரணமாக உப்பளங்களில் உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை பாதுகாப்பாக கரைப்பகுதியில் குவியலாக கொட்டி மூடி வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உப்புகள் கரைந்து வீணாகும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக மரக்காணத்தில் உள்ள உப்பளத்தில் உற்பத்தி செய்யக்கூடிய உப்புகளை பாதுகாப்பாக வைப்பதற்கு குடோன் ஒன்று அமைக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மழையால் 3,500 ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனவும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்