கனமழையால் தாராபுரம் அடுத்த சின்னபுத்தூர் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை திருப்பூர் மாவட்ட இணை இயக்குனர் மாரியப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்
தாராபுரத்தை அடுத்த சின்ன புத்தூர் மற்றும் அதனால் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தொடர் மழையால் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதுகுறித்து ் தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பொன்னாபுரம் மற்றும் சின்னபுத்தூர் பகுதியில் நெல் வயல்களை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் " சின்ன புத்தூர் கிராமத்தில் நெல் நடவு முடித்துள்ளது. பலத்த மழையின் காரணமாக பாசன வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக வந்ததது. மேலும் வரப்புகள் சிறிதாக இருந்ததாலும், கரை உடைபட்டு நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. தற்சமயம் நெல் வயல்களில் முற்றிலும் நீர் வடிந்து காணப்படுகிறது., இதனால் பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.விவசாயிகளுக்கு உடனடியாக நீரை வடித்து விட வேண்டும் என்றார்.
கோரிக்கை
மேலும் விவசாயிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கே.லீலாவதி மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.