16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

Update: 2023-07-08 11:42 GMT

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதாவது, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்