வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை

வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Update: 2023-09-16 17:02 GMT

வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

வந்தவாசி பகுதியில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை வந்தவாசி, சென்னாவரம், அம்மையப்பட்டு, வெண்குன்றம், மும்முனி, பாதிரி, பிருதூர், மருதாடு, தெள்ளார், கீழ் சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடி, பலத்த காற்றுடன் கூடிய கனமழை செய்தது பலத்த மழை எதிரொலியாக வந்தவாசி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேபோல் சேத்துப்பட்டு பகுதியிலும் 50 நிமிடம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.\

Tags:    

மேலும் செய்திகள்