ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழை: மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது-போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழைபெய்ததால் தென்னை மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-05 16:26 GMT

ஆனைமலை

ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழைபெய்ததால் தென்னை மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஆனைமலையில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பின. மேலும் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்்தது. இதனால் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் அதிகஅளவில் திறக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஆழியாற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மரம் முறிந்து விழுந்தது

இந்தநிலையில்  ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் செல்லும் சாலையில் தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதனால் அந்த சாலையில் வந்த வாகனங்கள் அனைத்து மேற்கொண்டு செல்லாமல் இருபுறமும் நின்றது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் அங்கு விரைவாக சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரம் அப்புறப்படுத்தப்பட்டது.தென்னை மரம் முறிந்து சாலையில் விழுந்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்