அம்மாபேட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் மழைமரம் சாய்ந்து விழுந்து மாட்டு கொட்டகை சேதம்
அம்மாபேட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் மரம் சாய்ந்து விழுந்து மாட்டு கொட்டகை சேதமானது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவது போல் போக்கு காட்டியது. இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை சுமார் 4 மணி அளவில் லேசான காற்று வீசத் தொடங்கியது.
அதன்பின்னர் சூறைக்காற்றுடன் 4.45 மணி வரை மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சின்னப்பள்ளம் அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரம் அந்தோணி என்பவரது மாட்டு கொட்டகையின் மீது சாய்ந்து விழுந்தது. இதில் மாட்டு கொட்டகை முற்றிலும் சேதமானது.
அப்போது கொட்டகையில் ஆடுகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைத்தும் உயிர் தப்பின. கொட்டகையில் இருந்த 2 மாடுகளும் மர கிளையின் இடுக்குகளில் சிக்கியதால் உயிர் தப்பியது.