மழைநீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-13 15:23 GMT


திருப்பூர் வஞ்சிபாளையம் சாலையில் இருந்து மங்கலம் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையாக இருக்கும் அணைப்பாளையம் பகுதியில் ரெயில்வே பாலத்திற்கு கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் கார்கள் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரில் தத்தளித்து செல்கிறது. சில சமயங்களில் கார்களும் பழுதாகி நின்று விடுகிறது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்