டிரான்ஸ்பார்மரை சூழ்ந்த மழைநீர்

வெண்ணந்தூரில் டிரான்ஸ்பார்மரை மழைநீர் சூழ்ந்து உள்ளது.

Update: 2022-11-03 18:45 GMT

வெண்ணந்தூர்

வெண்ணந்தூரிலிருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் சாலை அருகே கொத்தான்காடு பகுதி உள்ளது. இந்த சாலை ஓரத்தில் ஏரிக்கரையையொட்டி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது தொடர் மழையின் காரணமாக தரைத்தளத்தில் உள்ள அந்த டிரான்ஸ்பார்மரை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் மழை தொடர்ந்து பெய்தால் மழைநீர் மேலும் உயர்ந்து டிரான்ஸ்பார்மரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அலுவலர்கள் டிரான்ஸ்பார்மரை சுற்றி மழைநீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்