தேங்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள் அவதி

கம்பைநல்லூர் அருகே தேங்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2022-10-28 18:45 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள கொங்கரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கால்சானூரில் இருந்து கருவேலம்பட்டிக்கு செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக நடந்்தும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள் குளம்போல் தேங்கி உள்ள மழை நீரில் நிலைதடுமாறி விழுகின்றனர். எனவே கால்சானூரில் இருந்து கருவேலம்பட்டிக்கு செல்லும் மண் சாலையில் மழைநீர் தேங்காமல் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்