சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை...!

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2022-12-24 15:01 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மாம்பலம், ஆலந்தூர், வடபழனி, கோயம்பேடு, அடையாறு, நங்கநல்லூர், வேளச்சேரி, கோடம்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்