சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை...!

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

Update: 2022-06-20 13:42 GMT

கோப்பு படம்

தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், அண்ணாநகர், சாலிகிராமம், கொரட்டூர், வளசரவாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், மதுரவாயில் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. மழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும் சற்று அவதிக்குள்ளாகினர்.

முன்னதாக, நேற்று நள்ளிரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்