மழை வெள்ளம் அல்ல...!
மதுரை கலெக்டர் அலுவலக வளாகம் மழை வெள்ளம் போல கழிவுநீர் தேங்கி கிடந்தது.
படத்தை பார்த்ததும் இது ஏதோ மழை பெய்து தண்ணீர் வெள்ளம் போல திரண்டு இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இப்படி கழிவுநீர் வெள்ளம் போல தேங்கி கிடக்கிறது. மக்கள் குறை தீர்க்கும் இடமான கலெக்டர் அலுவலகத்தில் தேங்கிய கழிவுநீர் வழியாக தான் பொதுமக்கள் நடந்து சென்று தங்கள் குறைகளை தீர்க்க செல்ல வேண்டி உள்ளது. துர்நாற்றம் வீசும் கழிவுநீரால் நோய் பரவும் முன் அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?