விருதுநகரில் மழை

விருதுநகரில் நேற்று மழை பெய்தது.

Update: 2023-09-22 18:45 GMT


விருதுநகரில் நேற்று காலை மேகமூட்டமாகவே காணப்பட்ட நிலையில் மதிய நேரத்தில் சில மணி நேரம் வெயில் சுட்டெரித்தது. மதியத்திற்கு மேல் பெய்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்த மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். பஸ் நிலையத்தில் முன்பகுதி, அக்ரஹாரம் தெரு, ெரயில்வே பீடர் ரோடு, பாவாலி ரோடு உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கியது.

சில நாட்களாக மழை மேகங்கள் திரண்டும் விருதுநகரில் மழை பாராமுகம் காட்டியது. எனினும் நேற்று மதியத்திற்கு மேல் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்