தா.பேட்டை:
தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து தா.பேட்டை பகுதியில் இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.