திருமருகல் பகுதியில் பரவலாக மழை
திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, போலகம், திருப்புகலூர், சியாத்தமங்கை, ஆதினங்குடி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை பருத்தி சாகுபடிக்கு பலன் அளிக்கும் என விவசாயிகள் கூறினர்.