தா.பேட்டை:
தா.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தா.பேட்டை பகுதியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்று வீசியது. பின்னர் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.