ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை பெய்தது.

Update: 2023-10-05 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

லேசான மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக கோடைகால சீசன் முடிந்து 3 மாதங்கள் கடந்த பின்னரும் தற்போது வரை வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வருகின்றது.

இதே போல் மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனிடையே ஆர்.எஸ் மங்கலம் நகர் மற்றும் தாலுகாவுக்கு உட்பட்ட குயவனேந்தல், சனவேலி, மேல்பனையூர் ஏந்தல், ஆனந்தூர் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் நேற்று பகல் நேரத்தில் 20 நிமிடம் மட்டும் லேசான மழைபெய்தது.

விவசாயிகள் ஏமாற்றம்

பருவமழை சீசனை எதிர்பார்த்து ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் விவசாயிகள், விவசாய நிலங்களில் உழவு செய்து விதைநெல்களை தூவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மழையை எதிர்பார்த்து இருந்து வரும் நிலையில் நேற்று மேக கூட்டங்கள் திரண்டு வந்து லேசான அளவு மழை பெய்து நின்று விட்டதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல் நயினார்கோவில் யூனியனுக்குட்பட்ட பாண்டியூர், தேர்த்தங்கல், மஞ்சக்கொள்ளை உள்ளிட்ட ஒரு சில கிராமங்களிலும் லேசான மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்