பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பெரம்பலூரில் திடீரென்று சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் இரவில் சிறிது நேரம் பலத்த மழையாகவும், அதனை தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.