நெல்லையில் சாரல் மழை

நெல்லையில் சாரல் மழை பெய்தது.

Update: 2023-01-23 20:06 GMT

வடகிழக்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் குறைந்த அளவே பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் பனிப் பொழிவு காலை 7 மணி வரை இருக்கிறது. இதனால் காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் மற்றும் இரவிலும் டவுன், சந்திப்பு, வண்ணார் பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த திடீர் சாரல் மழையால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்