தஞ்சையில் திடீர் மழை

தஞ்சையில் நேற்று திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

Update: 2023-08-29 20:39 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் நேற்று திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

வெயில்

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. தற்போதும் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது.மாலை 5 மணிக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. லேசான தூறலுடன் மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது.

வெப்பத்தின் தாக்கம் ணிந்தது

தொடர்ந்து வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்ததன் மூலம் இரவில் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது.இதைப்போல நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள கூத்தன் சாரி, அதினாம்பட்டு, மாதாக்கோட்டை, விளார், புதுப்பட்டினம், ரங்கநாதபுரம், துலுக்கம்பட்டி, சூரியம்பட்டி, உச்சிமாஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்