அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் நேற்று காலையில் கடும் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, காந்திநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அருப்புக்கோட்டையில் பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.