20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை... வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-10 11:29 GMT

சென்னை,

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னதாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யுமென்றும், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்