திருவண்ணாமலையில் ஒரு மணி நேரம் மழை
திருவண்ணாமலையில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
திருவண்ணாமலையில் நேற்று பகலில் வழக்கத்தை விட அதிகமாக வெயில் அடித்தது. வழக்கமாக அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டத்தின் போது மழை வரும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, நேற்று மாலை அருணாசலேஸ்வரர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கியதும் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.