சாத்தூரில் 1 மணி நேரம் மழை

சாத்தூரில் 1 மணி நேரம் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-08-28 19:06 GMT

சாத்தூர், 

சாத்தூரில் 1 மணி நேரம் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திடீர் மழை

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர மிகுந்த சிரமப்பட்டனர். இந்தநிலையில் நேற்று காலையும் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது.

இதையடுத்து மாலையில் 5.20 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது. பின்னர் சாத்தூர், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி, வெங்கடாசலபுரம், இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, சிறுகுளம், கு.சொக்கலிங்கபுரம், குண்டலகுத்தூர், நல்லமநாயக்கன்பட்டி பெரியஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. தற்போது விவசாயிகள் விவசாய பணிகள் தொடங்கி இருப்பதால் இந்த மழை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்