11 மாவட்டங்களில் 29, 30-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

Update: 2022-06-27 11:46 GMT

சென்னை,

தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி, காற்று வேக மாறுபாடு, வெப்பசலனம் காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.அந்தவகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 29, 30-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்