மழை எதிரொலி: பழனி பகுதியில் உழவு-விதைப்பு பணி தீவிரம்

மழை எதிரொலியாக பழனி பகுதியில் உழவு மற்றும் விதைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2022-09-04 15:08 GMT

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியது. அதைத்தொடர்ந்து பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய பகுதிகளில் மானாவாரி விளைநிலங்களில் உழவு மற்றும் விதைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் ஏர் பூட்டி உழவு செய்வதுடன் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவற்றை விதைத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்