மழை பாதிப்பு: மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் - அமைச்சர்களுக்கு முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Update: 2023-11-29 15:07 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு ,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்துக்குச் சென்று பணியாற்ற வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்