நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Update: 2022-11-11 18:37 GMT

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக அலுவலகங்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் குடை பிடித்தபடி நடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் சாலையில் சென்ற பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. காலை நேரத்தில் பெய்த மழையால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஏரி குளங்கள் நிரம்பின. வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் மழையால் பாதிப்புக்கு உள்ளானார்கள். ராசிபுரம் மாரியம்மன் திருவிழாவையொட்டி போடப்பட்டிருந்த கடைகளில் மழையின் காரணமாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு என பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்