சிட்டம்பட்டியில் 102 மி.மீ. மழை பதிவு
சிட்டம் பட்டியில் 102 மி.மீ. மழை பதிவானது.
சிட்டம் பட்டியில் 102 மி.மீ. மழை பதிவானது.
கனமழை
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிட்டம்பட்டியில் 102 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- சிட்டம்பட்டி- 102, கள்ளந்திரி- 98.60, தனியாமங்கலம்- 63, மேலூர்-52, சாத்தையாறு அணை-37.60, திருமங்கலம்-32.60