நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Update: 2022-07-23 18:05 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மழை இரவு 9 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது.

இதேபோல் நாமகிரிப்பேட்டை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்