சேலம்:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சேலத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இருப்பினும் நேற்று சேலத்தில் மதியம் வெயில் அடித்தது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் குளிர்காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை தூறல் விழுந்தது.
பின்னர் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. இதனால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.