எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, கே.புதுப்பட்டி, பிரான்பட்டி, குன்னத்தூர், நாகமங்கலம், கிழவயல், கரிசல்பட்டி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கத்தரி வெயில் முடிவடைந்த நிலையிலும், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் குளுமை சூழ்ந்தது.