ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போனஸ் உச்ச வரம்பை உயர்த்தகோரி குன்னூரில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-30 19:45 GMT

போனஸ் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும், அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே தொழிற்சங்கம்(டி.ஆர்.இ.யூ.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ரபீக் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் பெரோஸ் கான் நன்றி கூறினார். இதில் சங்கத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்