ரெயில்வே தொழிற்சங்க கூட்டம்
நெல்லையில் ரெயில்வே தொழிற்சங்க கூட்டம் நடந்தது.
ரெயில்வே தொழிற்சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது. மண்டல உதவி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ரபிக், தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜா ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.