ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் - விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை ரெயில்வே பாதுகாப்பு படை காவலர் பிரவீன் குமார் விரைந்து சென்று காப்பாற்றினார்.

Update: 2022-09-17 20:13 GMT

சேலம்,

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பயணிகள் புறப்பட தயாரான போனது, அதில் பெண் ஒருவர் ஓடி வந்து அவசரமாக ஏற முயன்றார். அதற்குள் ரெயில் கிளம்ப தொடங்கியதால், அந்த பெண் நிலை தடுமாறி நடைமேடையில் விழுந்தார்.

இந்த நிலையில் தண்டவாளத்திற்கும், நடை மேடைக்கும் இடையே மாட்டிக் கொள்ள இருந்த அந்த பெண்ணை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை காவலர் பிரவீன் குமார் விரைந்து சென்று காப்பாற்றினார். இதனால் அப்பெண் பெரும் விபத்தில் இருந்து சிறிய காயங்களுடன் தப்பினார். இதையடுத்து தக்க நேரத்தில் விரைவாக செயல்பட்டு அந்த பெண்ணை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்