ரெயில்வே தண்டவாளத்தில் கற்களை வைக்கக்கூடாது பொதுமக்களுக்கு ரெயில்வே போலீசார் எச்சரிக்கை

ரெயில்வே தண்டவாளத்தில் கற்களை வைக்கக்கூடாது என பொதுமக்களுக்கு ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2022-12-15 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் மார்க்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே ஊழியர்கள் டிராலியில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சிறுவத்தூர் ரெயில் நிலையம் அருகே மர்மநபர்கள் யாரோ? தண்டவாளத்தில் ஈர பதத்துடன் உள்ள களி மண்ணை கட்டியாக வைத்திருந்ததால், டிராலி வழுக்கியபடி நீண்ட தூரம் இழுத்துச் சென்று விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையிலான போலீசார் சின்னசேலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தையொட்டி உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்களை சந்தித்து, ரெயில் தண்டவாளத்தில் விளையாட்டுத்தனமாக கல், மண் கட்டி, பாட்டில் போன்ற பொருட்களை வைக்கக் கூடாது எனவும், தண்டவாளத்தை கழிப்பறையாக பயன்படுத்தக் கூடாது எனவும், ரெயில் செல்லும் போது ரெயில் பெட்டிக்குள் கல் வீசுவது சட்டப்படி குற்றமாகும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்