ெரயில்வே பாதையை ஆபத்தான நிலையில் கடக்கும் கிராம மக்கள்

உசிலம்பட்டி அருகே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கிராமமக்கள் ரெயில்வே பாதையை ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது.

Update: 2022-09-20 21:16 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கிராமமக்கள் ரெயில்வே பாதையை ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் அவலநிலை தொடர்கிறது.

ரெயில்பாதை

உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்டது நல்லிவீரன்பட்டி. இந்த கிராமத்தில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாடு உசிலம்பட்டி கண்மாய் அருகில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் சுடுகாட்டிற்கு செல்ல மதுரை-போடி ெரயில் பாதையை கடந்து செல்லும் தார்ச்சாலை வழியாகவே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுடுகாட்டிற்கு சென்று வந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மதுரை-போடி ெரயில் பாதையை அகல ெரயில்பாதையாக மாற்றம் செய்யும்போது இந்த வழிப்பாதையில் பாலம் அமைத்து தர தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ெரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்று வந்த பாதையை ெரயில்வே நிர்வாம் அடைத்து அகல ெரயில்பாதை அமைக்கப்பட்டு ெரயில்கள் சென்றுவருகின்றன.

கோரிக்கை

இந்தநிலையில் அவ்வப்போது இறப்பவர்களின் உடல்களை இந்த ெரயில்பாதை வழியாகவே ஆபத்துடன் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகமும், தென்னக ெரயில்வே நிர்வாகமும் கிராம மக்கள் சுடுகாட்டிற்கு சென்றுவர பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் அந்த கிராமத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுடுகாட்டுக்கு செல்ல பாதையை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்துரு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்