தண்டவாள இணைப்பு பணி: அந்தியோதயா, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நெல்லையுடன் நிறுத்தம்

தண்டவாள இணைப்பு பணி காரணமாக அந்தியோதயா, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நெல்லையுடன் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-03-13 20:08 GMT


திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட மேலப்பாளையம்-நாங்குநேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப்பாதைக்கான தண்டவாள இணைப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி முதல் வருகிற 21-ந் தேதி நாகர்கோவில் புறப்பட வேண்டிய தாம்பரம் -நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) மற்றும் வருகிற 17-ந் தேதி முதல் வருகிற 22-ந் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் புறப்பட வேண்டிய நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ெரயில் (வ.எண்.20692) ஆகியன நெல்லை - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் நெல்லையில் இருந்து இயக்கப்படும். அதேபோல, திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627/ 22628) வருகிற 17-ந் தேதி முதல் வருகிற 22-ந் தேதி வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில்கள் அனைத்தும் மதுரை ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்துக்கு வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்