ராகுல் காந்தி நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த நிலையில் பயணம் திடீர் ரத்து.!
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தியின் நினைவுதின நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21-ந் தேதி (நாளை) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ராகுல் காந்தியில் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்துசெய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்து உள்ளது. நினைவுதின நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணங்களால் ராகுல்காந்தியால் பங்கேற்க முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.