ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத்தில் 3 இடங்களில் நேற்று போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-20 20:13 GMT

காங்கிரசார் போராட்டம்

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு மற்றும் அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாநகர பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, பிரபு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் ராகுல்காந்தி எம்.பி.பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாநகர தலைவர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, மேகநாதன், மாநகர பொதுச்செயலாளர்கள் கோபி குமரன், மொட்டையாண்டி, சுரேஷ்பாபு, சீனிவாசன், மாநில வக்கீல் பிரிவு ரஞ்சித்குமார், விவசாய பிரிவு சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர்- தலைவாசல்

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மேட்டூர் தலைமை தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் எம்.எம்.ரத்தினவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என்.மகேஸ்வர், கே.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.என்.டி.யூ.சி. மாநில பொருளாளர் பாலசுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, கொளத்தூர் வட்டார தலைவர் எஸ்.எஸ்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவாசல் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட பொது செயலாளர் அரங்கசங்கரய்யா, வட்டார தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜே.பி.கிருஷ்ணா, கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நேதாஜி அழகுவேல், ராமர் முருகேசன், கண்ணன், ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் வைரம்மாள் பெரியசாமி, வட்டார நிர்வாகிகள் துரைசாமி ஜெயராமன், லத்துவாடி முருகன், ஆத்தூர் நகராட்சி கவுன்சிலர் தேவேந்திரன், வட்டார தலைவர்கள் குருசேவ், ரவிக்குமார், பெரியசாமி, நகர தலைவர்கள் தன்ராஜ், சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது தபால் அலுவலக வாசற்படியில் அமர்ந்து அர்த்தனாரி போராட்டம் நடத்தினார். அவரை அங்கிருந்து போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசார் கூறினர். போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்